பொருட்பால்
Canto
on Wealth
ஆனைமுகன் காப்பு
அறுமுகனின் அண்ணனாம் ஆனைமுக அண்ணல்
உறுதுணை யாவான் நமக்கு
ஆதிமுத லாயவரன் அன்னையுமை தானுலகென்
றோதிய வேழந் துணை
When I started writing this research commentarய், more than a year ago, I
did not have the slightest idea that I would persevere and make it a part of my
daily routine. Hence did not write a customary invocatory verse on Ganesha. Here
I compensate by writing two verses, one a late addition to the previous canto
and another one for this canto. I offer this dedication to the primordial
source that has helped me thus far and pray the omniscient, the very embodiment
of the praNava nAdhA.
We begin with the next major canto that discusses
the material worldly life and its several aspects in detail. It has its
chapters organized under major sub headings such as Political Governance,
Minister’s code of conduct, territorial protection, creating wealth, protecting
the country from enemies, friends and foes, citizenry etc. In short, this canto
is all about how not lead a materialistic life in the material world that
requires understanding everyone’s role in the context of life on earth. After
all the saying “porUL illArkku ivvulagam illai” is true while a person leads
life on earth.
39: (Merits of Ruler - இறைமாட்சி)
[The first
chapter of first subheading of politics and governance in this canto begins
with the merits of a ruler. The ruler of a land is a representative of Godhead
as he protects his people, make sure the governance is impartial; what make a
ruler glorious, majestic and splenderous are discussed through this chapter]
11th May 2013
படைகுடி
கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான்
அரசரு ளேறு.
(குறள் 381: இறைமாட்சி
அதிகாரம்)
Transliteration:
paDaikuDi
kUzhamaichu naTp(u)araN Arum
uDaiyAn
arasaruLERu
paDai – extremely capable defense that protects
kuDi – Good citizens
kUzh – Economic strength
amaichu – good guidance from ministers
naTp(u) – good friendship with neighboring rulers
araN – the boundary protecting castles, and capacity
Arum – all the above six aspects
uDaiyAn – one who has is
arasaruL – among the rulers
ERu – is the best.
The Canto on wealth has been segmented into seven major topics underwhich
the chapters are organized. They are politics, guidance of good ministers in
administration, safeguarding boundaries, activities pertinent to economics
prosperity, defense, friendships of the state, and citizenry. The first chapter on “Merits of the ruler”
(iRai mAtchi) points to other aforementioned six topics, as those are the
guiding principle for a ruler to be celebrated as the best ruler. The rulers
that rule as representative of Godhead, are themselves viewed as equivalent to
the Supreme God. By citing the other six, he also gives an idea of what other
major topics are covered in this canto.
What are the things that bring glory or merit to rulers? A defense that
is alert and agile to defend the territories from the enemies, good citizes
that are virtuous, a robust base for economic prosperity of the country and
citizens, a good pool of ministers that guide the ruler as well as the country
for overall glory and prosperity, friends in other rulers as well others that
will keep them in good stead, boundary
safegurading arrangements such as castles (not relevant these days, but secure bunkers
of safety for safeguarding the rulers
from disasters) are the six guides that make a ruler the best among others.
nallaththanAr in his
ThirikaDugam, gives the same six, three aspects at a time in two verses. The
first verse insists the priniciples that a ruler cannot giveup. The second
verse tells the essential garbs of a ruler
“A ruler with good
defense, citizens, economic structure, friends of the state,
Castles of protection, guiding ministers is
the best among the rulers to state!”
தமிழிலே:
படை - நாட்டைக் காக்கின்ற வீரமிக்க
படை
குடி - நல்ல குடிமக்கள்
கூழ் - அவர்கள் பொருளீட்டி வசதிகளோடு
வாழும் பொருளாதார வளம்
அமைச்சு - அரசனை நல்ல வழியில் நடத்திச்
செல்லும் அமைச்சர் குழாம்
நட்பு - அரசனை போர்வழிச் செலுத்தாது
அவனோடு நட்புறவிலே இலங்கும் நட்பரசர்கள்
அரண் - நாட்டின் நிலங்களை அவற்றின்
எல்லைகளோடுகளை காக்கின்ற வகையும், கோட்டைகளும்
ஆறும் - ஆகிய மேற்காணும் ஆறும்
உடையான் - உடைய ஆள்பவரே
அரசரு(ள்)
- ஆள்பவருள்
ஏறு - உயர்ந்தவர் (சிங்கம்,
யானை என்று அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு சொன்னாலும்)
பொருட்பாலை அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல்,
நட்பியல், குடியியல் என்று ஏழு இயல்களாகப் பிரித்து, அவற்றின் கீழ் அதிகாரங்களை வகைசெய்துள்ளார்
வள்ளுவர். இறைமாட்சி என்பது அரசியலின் கீழ் வரும் முதல் அதிகாரம். இவ்வதிகாரத்தின்
முதற்குறளிலேயே மற்ற ஆறு இயல்களைச் சுட்டிக்காட்டி, பொருள் சார்ந்த புவியை ஆள்பவர்களும்,
இறையறத்தின் காவலர்களாக, இறைவனுக்கு இணையாக வைத்து கொண்டாடப்படுபவர்களாகவும் உள்ள ஆள்வோர்களுக்குச்
சிறப்பு சேர்ப்பது என்னவென்று கூறுகிறார் வள்ளுவர். இதன்மூலம் பொருளாதிகாரத்தின் இயற்பகுப்பினையும்
மிகவும் அழகாகச் சொல்லிவிடுகிறார்.
ஒரு அரசனுக்குப் பீடு சேர்ப்பது எவை என்றால், அவை, நாட்டைக்காக்கின்ற
வீரமிக்க படை, நல்ல குடிமக்கள், பொருளாதார வசதிகளுக்கான வலிமையான அடித்தளம், ஆள்வோரை
வழி நடத்துகின்ற நல்ல அமைச்சர்கள், ஆள்வோரைப் போர்வழி செலுத்தாமல், நட்புறவிலே இருத்தும்,
அண்டை நாட்டுக் காவலர்கள், நாட்டின் நிலப்பரப்பை, அதன் எல்லைக்கோடுகளை காக்கின்ற ஏற்பாடுகளும்,
கோட்டைக் கொத்தளங்களும்தான். மேற்கூறிய ஆறுவகைக் கூறுகளும், ஆள்வோரை நல்லாட்சியிலே
ஆற்றுப்படுத்துகிற காரணிகள்.
கி.வா.ஜவின் ஆராய்ச்சிப் பதிப்பில் அவர் ஒப்புமையாக இரண்டு
திரிகடுகப்பாடல்களை மேற்கோளாக இடுகிறார். அவை இவ்வாறையும் மும்மூன்றாய் பிரித்துக்
கூறுகின்றன.
ஆள்பவர் கைவிடலாகதவை யாவை? நல்லத்தனார் கூறுவது:
கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்
கடைமணிபோல் திண்ணியான் காப்பும் இம்மூன்றும்
படைவேந்தன் மற்று விடல்.
ஆளுபவருக்குரிய உறுப்புகள் எவை? நல்லத்தனார் கூறுவது:
பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் - வைத்துஅமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாகும் மேந்தர்க்கு உறுப்பு.
ஆறு என்ற எண்ணிக்கை, மூலக்குறளில், தேவையற்ற ஒரு ஒட்டாகையால், நான் எழுதிய குறள்களில்
அதை சேர்க்கவில்லை.
இன்றெனது குறள்(கள்):
நாடுபடை நற்குடி நல்லமைச்சர் நட்புவளம்
கூடுமாள் வோர்பெறும் பீடு
nADupaDau naRkuDi nallamaichar
naTpuvaLam
kUDumAL vOrpeRum pIDu
நற்குடி நல்லமைச்சர் நாடுபடை நட்புபொருள்
உற்றாள் பவர்க்கே உயர்வு
naRkuDi nallamaichar nADupaDai
naTpuporuL
uRRAL bavarkkE uyarvu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam