மே 04, 2013

குறளின் குரல் - 387


4th May 2013

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
                              (குறள் 379: ஊழ் அதிகாரம்)

Transliteration:
nanRAngAl nallavAk kANbavar anRAngAl
allaR paDuva dhevan?

nanRAngAl – if everything that happens is good
nallavAk – the fruits of those as good
kANbavar – are enjoyed as so
anRAngAl – when something does not happen to be good
allaR paDuvadh(u) – feel so miserable about the pain incurred
evan? – Why so?

This verse raises a question to ponder deeply. When the fate sets good to happen for happiness, and those who enjoy such happiness, why would they worry, feel miserable when something that is not good happens?
                                
Parimelazhagar interpretes this from the perspective of an ascetic! He says that when good happens, instead of enjoying one must forego them. Similarly when good does not happen, without feeling remorse or complaining, it should be construed as an opportunity to annul the bad deeds of previous births.
The whole thought has been expressed in verse in kamba rAmAyaNam too. “inbam vandhuRumenin iniyadhAyiDaith thunbam vandhuRumenin thuRakkalAgumo?”

“When a person rejoices the good given by fate
Why feel miserable if it is otherwise and negate?

தமிழிலே:
நன்றாங்கால் - நன்று+ஆங்கால் - எல்லாம் நன்றாக (நல்வினைகளாக) நடக்கும் போது
நல்லவாக் - விளைவாய இன்பங்களை நல்லவை
காண்பவர் - என்று மகிழ்கின்றவர்கள்
அன்றாங்கால் - அன்று+ஆங்கால் - அல்லவை, (நன்றல்லாதன) நடக்கும் போது
அல்லற் படுவ(து) - அதன்கண் விளையும் துன்பங்களுக்காக வருந்துதல்
எவன்? - எப்படி? ஏன்? எதற்காக? எதைக்கருதி?

இக்குறள் ஒரு சிந்திக்கத்தக்கக் கேள்வியை முன்வைக்கிறது. ஊழினாலே நடப்பதெல்லாம் நன்றாக நடந்து இன்பமும் விளையும் போது மகிழுபவர்கள், அதே ஊழினாலே சிலநேரங்களில் நல்லவையல்லாதவை நடக்கும் போது அதற்காக வருந்துவது ஏது கருதி?

பரிமேலழகர் உரை துறவறத்தின்பால் நின்று கூறப்படுகிறது. நல்லவற்றால் இன்பங்கள் வரும் போது அவற்றை மகிழ்ந்து ஏற்காது துறக்காமல், துன்பம் வந்தபோது அவற்றைத் துய்த்து முன்வினைக் கருமங்களை கழிக்காமல் வருந்துவது ஏன் என்று கேட்கிறார்.

முற்றுக்கருத்தையும் கம்பராமாயண தைலமாட்டுப்படலப் பாடலொன்று கூறுகிறது. “ இன்பம்வந் துறுமெனின் இனிய தாயிடைத் துன்பம்வந் துறுமெனின் துறக்க லாகுமோ?”

இன்றெனது குறள்:

இனிக்கின்ற இன்வினைக்கு இன்புறுவார் இன்னா
எனில்வருத்தம் ஏன்கொள் வரோ?

inikkinRa invinaikku inbuRuvAr innA
enilvaruththam EnkoL vaRO?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...