29th April 2013
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
(குறள் 374: ஊழ்அதிகாரம்)
Transliteration:
iruvERu ulakaththu iyaRkai
thiruvERu
theLLiya rAdhalum vERu
iruvERu – to be of two different ways (based on fate)
ulakaththu – of the world
iyaRkai – it is the nature
thiru vERu – To be wealthy is a different fate (may not be
knowledgeable)
theLLiyarAdhalum vERu – To be knowledgeable is again a diiferent fate
“Knowledge
is the source of earning and accumulating wealth” - is the common knowledge. But
when we see that erudite being poor and the rich devoid of brilliance of knowledge,
we understand this to be two different folds of what we term as fate.
Fate
acts contrary to what we expect and also is primarily construed to be the consequence
of our deeds of earlier births. This also indirectly says that there is none
more powerful than fate.
There
are verses in pazhamozhi and nAlaDiyAr stressing the same theme. A verse says, in the
world surrounded by oceans, the blessings for wealth and knowledge seem to be
because different fates. After all we see intelligent and knowledgeable live
the life of poor where as ignoramus live wealthy.
Another verse succinctly says that it because
of the deeds of earlier births, we see such abberations and contrary to
personal traits in present life
It is the nature of the world
that fate has two different folds
Rich without knowledge and
knowledgeable without riches
தமிழிலே:
இருவேறு - இரண்டு
வேறு ஊழ் பயன்கள் இருப்பது
உலகத்து - உலகத்தினுடைய
இயற்கை - இயற்கையும், நியதியுமாம்
திரு வேறு - இதில் செல்வம் சேருவதற்கான
விதி என்பது ஒன்று
தெள்ளியராதலும்
வேறு -
அறிவுடையராக இருத்தல் என்பது மற்றொரு விதமாய விதி
அறிவுடமையே பொருள் ஈட்டுவதற்கும் செல்வம் சேருவதற்குமான
காரணம் என்பது எல்லோருக்கும் அறிந்தவொன்று. ஆனால் அறிவுள்ளவர்களிடல் திருவில்லாததும்,
திரு உள்ளவர்களிடம் அறிவு இல்லாததும், இரு வேறு விதமான உழ்வினையால்தான் என்பதும் இவ்விதம்
ஊழ் பொதுவாக அறிந்த கோட்பாடுகளுக்கு மாறாக இயங்குவது இயற்கையானது என்றும் கூறுகிறது
இக்குறள். இக்குறளும் ஊழின் பெருவலி யாவுள என்பதை வலிந்து அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்நிலையை எடுத்துக்காட்டும் பழமொழிப் பாடலொன்று இவ்வாறு
கூறும்:
“உரைசான்ற
சான்றோர் ஒடுங்கி யுறைய நிரையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்”
நாலடியாரில் நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்தில்,
வரும் இரண்டு பாடல்கள் இக்குறளின் கருத்தையொட்டி வருகின்றன.
புணர்கடல்சூழ்
வையத்துப் புண்ணியமோ வேறே
உணர்வ துடையா
ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும்
போல்வாரும் வாழ்வரே
பட்டும் துகிலும்
உடுத்து.
இப்பாடலின் கருத்து: கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய
புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின்,
கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறி முள்ளியும் கத்தாழையும்
போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். இப்பாடலின் உள்ளுரைக் கருத்து: கறி முள்ளியும் கத்தாழைச்
செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்துவன. அதுபோல பழைய புண்ணியத்தால்
செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மையும் இல்லை என்னும் பாடல் இது.
நல்லார் நயவர்
இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன்
றாகிய காரணம் - தொல்லை
வினைப்பய னல்லது
வேனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன்
றில்.
இப்பாடலின் கருத்து: இவ்வுலகில் நல்ல அறிவுடையோரும்
நல்ல குணமுடையோரும் வறியராக இருப்ப, அவ்வறிவும் குணமும் அற்ற கீழோர் செல்வராக இருப்பதற்குக்
காரணம் பழைய வினைப் பயனேயன்றி, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேறு காரணம் இல்லை. அறிவொழுக்கம்
அற்றவர் செல்வராக வாழ்வதற்குக் காரணம் ஊழ்வினையே! ஆயினும் அவரிடம் இரக்கத் தன்மையின்மையால்,
செல்வம் பெற்றும் ஒரு பயனும் இல்லை என்பது கருத்து.
இன்றும் ஒரு கருத்து,
இரண்டு குறள்கள் ஆனால் கருத்தைப் பொருத்தவரை இரண்டும் ஒரே துருவத்தில்தான்.
இன்றெனது குறள்(கள்):
செல்வமும் சேரும் அறிவும் இருதுருவாய்
செல்வ தியற்கையுல கில்
selvamum sErum aRivum irudhuruvAi
selva dhiyaRkaiyula gil
திருவும் துலங்கும் அறிவுமிரு திக்கில்
இருப்ப தியற்கையுல கில்
thiruvum thulangum aRivumiru dhikkil
iruppa dhiyaRkaiyula gil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam