14th
November, 2012
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
(குறள் 207: தீவினையச்சம் அதிகாரம்)
Transliteration:
Enaippagai
yuRRArum uyvar vinaippagai
vIyAdhu
pinsenRu aDum
Enaippagai
– However big the enemity is
yuRRArum
-
that one earns (due to several other reasons)
uyvar
– there is a salvation to that
vinaippagai
– But enemity earned through bad/evil/sinful
deeds
vIyAdhu – without leaving
pinsenRu
– follows (subsequent births too)
aDum – will destroy a person
Ki.vA.ja’s research compilation for ThirukkuraL,
as I have said earlier, is a publication from Ramakrishna mutt, one of the most
extensive research works done so far. He had painstakingly quoted from several
sources for most verses. For many verses in the last few chapters, he has not
been able to quote much. This verse has quite a few quotes from Sangam and
later literature. The word “vIyAdhu” means “nIngAdhu” (that which does not go
away)
Quotes from Kaliththogai, Kamba RamAyaNam,
SilappadikAram, NAlaDiyAr, MaNimekAlai, ThEvAram of Sambandar and Sundarar are
all saying the same about “Evil deeds/sinful deeds” being enemy as well as the
effect of such deeds continuing through several births. “Uzhvinai uruththu
vandu UTTum” is one of major premises on which SilappadikAram has been
composed. Kambar says “thIvinai as enemy by saying “vinaippagaiyai
venRAn”. kallADam says: “ uyirpugum
saTTagam uzhithorum uzhithorum pazavinai pugunda pADagam pOla”.
The word “pagai” or “enmity” means the
hightlight of differences of opinions between two people, resulting in opposite
stances as well as enmity. With equanimous thoughts and right persons to bring
about centric views, even bigger enemical stances can be diluted and eventually
be rid off. But the enmity created out of evil deeds done to others will not
vanish in this birth, and will continue for several subsequent births too.
“Unlike
other bigger enmities that eventually vanish, enmity
born out of evil deeds to others will last for
soul’s eternity”
தமிழிலே:
எனைப்பகை - எததுணைப் பெரிய பகை
உற்றாரும் - ஒருவருக்கு உற்றாலும்
உய்வர் - அவர்கள் அப்பகையிலிருந்து தப்பிவிடக்கூடும்
வினைப்பகை - ஒருவர் செய்யும் தீவினைகளால் அவருக்கு ஏற்படும் பகை
(தீவினயே பகையினால் தானே)
வீயாது
- நீங்காமல்
பின்சென்று - ஒருவரைத் தொடர்ந்து (பிற பிறவிகளிலும் என்பது பெறப்பட்டது)
அடும்
- அவரை கொல்லும் வலியுடையது.
இக்குறளுக்கு கி.வா.ஜவின்
ஆராய்ச்சி உரையில் நிறைய ஒப்புமைகள் காட்டப்பட்டுள்ளன. வீயாது என்ற சொல்லுக்கு,
“நீங்காது” என்று பொருள்படும் என்பது “வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை” என்ற
வழக்கால் தெரியும்.
“வினைப்பகையை வென்றான்”
என்று கம்பராமாயணப் பாடல் (ஊர்தேடுபடலம்:166) சொல்லுவதன் மூலம், தீவினையைப்
பகையென்று பின்னர் வந்த கம்பரும் சொல்கிறார். சிலப்பதிகாரம், “ஊழ்வினை உருத்து
வந்து ஊட்டும் என்பதூஉம்” என்றும்,
“ஒழிகென ஒழியாதூட்டும் வல்வினை” என்றும், மணிமேகலை, “ உம்மை விநை
வந்துருத்தல் ஒழியாது” என்றும் கூறுவது இக்குறள் கருத்தை ஒட்டித்தான். தேவார
மூவருள் ஒருவரான, சுந்தரரும், “முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும்”, “முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய” என்பார்.
பகை என்பது ஒன்றோடு
மற்றொன்று முரண்படுவதின் உச்சம். கருத்துக்களுக்கு நடுவே அமைதிப் போக்கில்லாத
இருவரின் மோதல். எவ்வளவு பெரிய அளவிலே இம்முரண்பாடுகள் இருந்தாலும், நடுவாண்மை
சிந்தனையின் மேலீட்டு உடன்பாடு ஏற்பட்டு இணக்கமும் ஏற்பட்டு, பகையும் மறையலாம்.
ஆனால் ஒருவர் பிறருக்குச் செய்யும் தீவினையினால் ஏற்படுகிற பகையானது, அவரை
ஊழ்வினைப் பயன் போல இப்பிறப்பிலும் மறையாது, பின்வரும் பிறவிகளிலும் தொடர்ந்து
வந்து அவரைக் கொல்லும் வலியுடையது. இதுவே இக்குறளின் கருத்து.
இன்றைய குறள்:
பெரும்பகைக்கும்
தப்பிடுவர் தீச்செயலால் நீங்கா
வரும்பகையால் நின்றழி வர்
perumpagaikkum
thappiDuvar thIcheyalAl nIngA
varumpagaiyAl niRazhi var
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam