அக்டோபர் 31, 2012

குறளின் குரல் - 202

 31st  October, 2012

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
                     (குறள் 193: பயனில சொல்லாமை அதிகாரம்)

Transliteration:
Nayanilan enbadhu sollum payanila
pArith thuraikkum urai

Nayan ilan –  improper, not yielding good to anyone speaker
enbadhu  - is one who
sollum  - is exposed (can be said by)
payanila – the pointless or useless
pArithth(u) – that too in detail
uraikkum – speaking on a
urai - subject


The word “Nayan” has the following different word meanings in Tamil lexicon. “Good”, “Proper”, “Happiness” are some of them.  vaLLuvar has handled this to mean things said that are improper, not yielding good.  Parimelazhagar means this as “just”. Even that seems proper as “just” means “proper”. After all improper things are are unjust too.

When a person speaks about useless things in detail and pointless, then we can identify him to be a person of vain-speech.  When a person speaks, either it should yield good things to the person or to others. When that is not the case, then it is only“vain-speak”.  Even if it is vain-speak, but short, at least time is saved for everybody and what is said may even be forgotten.  Vain-speech in much detail, exposes the the speaker and irritates the listeners and will not yield any use to anyone; this is what is implied by this kuraL.

“Vain-speaker is exposed by the pointless
  Talk in detail yielding no good and useless”

நயன் இலன் – நன்மையில்லா அல்லது முறையற்ற வீண்பேச்சாளன்
என்பது - என்பதைக்
சொல்லும் - காட்டிக்கொடுத்து விட்டும்
பயனில – வீண்பொருளை, உதவாக் கருத்துக்களை
பாரித்து – வித்தரித்து, பெருக்கி, விரிவாக
உரைக்கும் - பேசுகின்ற
உரை - பேச்சு

நயன் என்ற சொல்லுக்கு இன்பம், நன்மை, ஈரம், செவ்வி, முறை என்ற பலபொருள்கள் இருந்தாலும் இக்குறளில் முறையற்ற, அல்லது எவருக்கும் நன்மையைத்தராத என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. பரிமேலழகர் நீதி என்று பொருள் சொல்லுகிறார். அதுவும் முறையே. முறையே நீதி, நன்மை பயப்பதுவே நீதி. முறையில்லாதவை அநீதிதானே! வடமொழி கலப்பில்லாமல் சொல்லவேண்டுமென்றால் முறைமை என்றே சொல்லலாம்.

ஒருவர் வீண்பொருள்களைப் பற்றி விவரித்துப் பேசுவதை வைத்து அவரை முறையில்லாத, நன்மை விளைவிக்கா வீண்பேச்சாளர் என்று கண்டுகொள்ளலாம் என்பதையே இக்குறள் சொல்லுகிறது. ஒருவர் பேசுகின்ற பேச்சிலே அவருக்காவது, மற்றவருக்காவது பயன் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமையின் அது வீண்பேச்சுதான்.  பயனில் பேச்சாயினும் சுருக்கமாயிருந்தால் மற்றவர் நேரமும் சொல்லுபவர் நேரமுமாவது செலவாகாது. விரிவாகப் பேசும் போது, பேசுபவருடைய முழு அறிவின்மையும், பேதமையும் வெளிப்பட்டுவிடும். அதனால் அவருக்கு அப்போது நினைத்துப்பேசிய பயன்மட்டுமல்லாது, வருங்காலத்தில் ஏதேனும் பயன் ஏற்பட வாய்ப்பிருந்தால் அவையும் கெட வாய்ப்பு இருக்கிறது என்பது உணர்த்துகிற குறள் இது.

இன்றெனது குறள்(கள்):
வீணாம் பொருளை விரித்துரைத்துப் பேசுவதே
மாணிலரைக் காட்டி விடும்
vINAm poruLai viriththuraiththup pEsuvadhE
mANilaraik kATTi viDum

வீண்பொருளை வித்தரித்துப் பேசுவதே நன்றில்லா
வீண்சொலரைக் காட்டி விடும்
vINporuLai viththariththup pEsuvadhe nanRilLA
vInsolaraik kATTi viDum     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...