25th October, 2012
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
(குறள் 187:
புறங்கூறாமை அதிகாரம்)
Transliteration:
Pagacholli – speaking slanderous words to separate
friends
kELirp – people that have friendship
pirippar – split them and ruin their friendship
nagacholli – having a happy words
natpAdal – enjoying friendships
thERRAdhavar – not knowing how to have
(such friendship)
Those who can not speak pleasant words to make
self and others happy and be in a friendship with, will indulge in slander and
get rid of the even a few friends they have; they may also cost friendship
between others by their slanderous talk. The word “paga” means “to be separated”.
The general understanding is that those are not friends with anyone, have all
as enemies. To infer that enemity is because of slanderous talk is not
absolutely true.
While reading many a commentaries on this
verse, don’t see wiser interpretations based on what the verse really attempts
to say. While celebrating the the words
of wisdom of vaLLuvar as they are said, we don’t have to take anything and
everything as Gospel too. Again and again, I have to only cite vaLLuvar’s own
verse of “epporuL yAr yAr vaai kEtpinium”.
Many don’t know how to have or keep friendships.
Some don’t even desire friendships. To argue that others are enemies for them and
that’s because of they indulge in slander is not wise. To assume that such introverted personalities
will indulge in slander to even separate friendship between others is to
suggest that they are some pathetic psychopathic people. Parimelazhagar
suggests that those who slander speak, will only have enemies. Though true,
again with people that do “nannayam” as suggested in a different verse it may
not even be the case.
The point is that as in many chapters,
sometimes, the logical connection between verses is sorely missing and there
seems to be an attempt to fill the “Ten verse per chapter” self-imposed
condition!
“That who can’t speak happy words and rejoice in friendships
Do slander and be rid
of, for self and others, such relationships”
தமிழிலே:
பகச் சொல்லிக் – பிறரைப் பிரிக்கும்படியாக அல்லது பிறர் தம்மை பிரிந்து
செல்லும்படி புறம் பேசி
கேளிர்ப் –
நட்பு நிலையிலுள்ளவர்களை
பிரிப்பர் –
பிரித்திடுவர்அவர்களின் நட்பினை அழிக்கும் படியாக
நகச்சொல்லி –
இனிமையான, மகிழும்படியான சொற்களைப் பேசி
நட்பாடல் –
நட்பினை கொண்டாடி
தேற்றாதவர்-
கொள்ளாதாவர்.
இனிய சொற்களால், தானும் மகிழ்ந்து பிறரையும்
மகிழ்வித்து பிறரோடு நட்புறவு கொள்ளதாவர்கள், புறம்பேசி இருக்கும் நண்பர்களையையும்
பிரிந்து போகும் படிசெய்திடுவர். “பக” என்ற சொல்லுக்கு “பிரியும் படி” என்ற பொருள்.
மற்றவரோடு நட்பிலாதவர்களுக்கு எல்லோரும் பகைவர்கள்தாம் என்ற பொருளில், அப்பகைமை
அவர்கள் மற்றவரைப் “புறங்கூறுதலால்” என்ற பொருளில் எழுதப்பட்ட குறள் இது.
உரையாசிரியர்கள் பலரும். மேலோட்டமாக
ஆய்வில்லாமல் உள்ளதை உள்ளவாரே பொருள் செய்துள்ள குறள்களில் இதுவுமொன்று. வள்ளுவர் வாய்மொழியைக் கொண்டாடுவதில் பெருமை
கொள்ளவேண்டும். அதற்காக வாய்க்கு வந்தமாதிரி எழுதியுள்ளவற்றையெல்லாம் ஆராயாமல்
அவ்வாறே ஒத்துக்கொள்ளுவது, பேதமை.
நட்புறவை கொள்ளாதவர், தக்கவைத்துக் கொள்ளாதவர்,
நட்புகளே வேண்டாமென்று தனக்குள்ளே முடங்கிப்போகின்றவர் என்று எல்லோருமே புறங்கூறி
நட்பு நிலையில் உள்ளவர்களையும் பிரிந்து விடுவார்கள் என்பதுய் எப்போதும் பொருந்திவருகிற
வாதம் அல்ல. அவ்வாறு புறம் பேசி நட்புறவிலே இருக்கும் மற்றவர்களையும்
பிரித்துவிடுவார்கள் என்பதும் ஒத்துக்கொள்ளும்படியான வாதம் அல்ல. “பிரிப்பர்” என்ற
சொல் தன்னிடமிருந்தா, அல்லது நட்பு கொண்ட மற்ற இருவரையா என்பது தெளிவாகவும்
சொல்லப்படவில்லை. பரிமேலழகரின் முடிவுக்
கருத்தான “புறஞ்சொல்லுவார்க்கு யாவரும் பகையாவர்” என்பதும், “நன்னயம் செய்துவிடல்”
என்பவருக்கும், “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றிருப்பவருக்கும் பொருந்தா.
இன்றெனது குறள்(கள்):
இன்சொலாடி நட்பு நலம்பேணார் நண்பரைப்
பின்தூற்றி நட்பழிப் பர்
புறஞ்சொல்லி நட்பழிக்கும் புன்குணத்தார் இன்சொல்
திறமற்று நட்பிலாத வர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam