17th July, 2012
இனைத்துணைத் தென்பதொன்
றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப்
பயன்.
(குறள் 87: விருந்தோம்பல்
அதிகாரம்)
Transliteration:
inaiththuNaith
thenbadhonRillai virundhin
thuNaiththuNai vELvip
payan
inaiththuNaith(u) – as if this is the measure (of returns
because of hospitality)
enbadhonRillai - one can not measure (the hospitality)
virundhin – based on guest’s
thuNaiththuNai – worthiness
vELvip payan – thesacrifice that the hospitality is (to be read
before the first word)
Hospitality and feeding guests are like performing a sacrificial
fire, considered holy and sacred duties of householders. Sacrifce is a high
virtue done with complete dedication. None can measure what benefits hospitality
and feeding guests can yield, because are entirely dependent on the worthiness
and merit of guests.
In the story of Adi Sankara, the saint philosopher, we read that
an old lady gave the only gooseberry fruit she had in her possession out of her
extreme hospitality to this little child who stood at her door for alms, despite
her abject poverty. In return, the world got the beautiful poetry of Adi
Shankara – “Kanaka DhArA” and the old lady was blessed with the shower of goden
coins by the Goddess of Wealth. The
Sabari episode is another example of hospitality from the epic RAmAyaNA.
In Saivite “periya purANam”, the story of “SiruthoNDar” feeding
the visiting saint with meat, killing
his own child, though an extremely gruesome act to imagine and cannot be a
great example by any standards, is to exemplify the virtue of hospitality.
Kamban’s beautiful poetry flowing like a pentliful river, compares
the King Mahabali’s benevolence, with the growth of vAmanA scaling the earth
and heavens. “viyanthavar verukkoLA, visumbin OnginAn, uyarndhavrkku udhaviya udhavi oppavE”.
In each the hospitability to worthy guests does greater good to
the hospitable householdere is what is hinted through this verse.
None can measure the hospitality
– a sacrifice and its gain.
It just depends on the
worthiness of the guests we entertain
தமிழிலே:
இனைத்துணைத்(து) – இந்த அளவினது (விருந்தோம்பலினால் வரும் பயன்)
என்பதொன்றில்லை – என்று ஓர் அளவிட முடியாது
விருந்தின் – வரும் விருந்தினரின்
துணைத்துணை – தகுதியின் அல்லது சிறப்பின் அளவேயாம்
வேள்விப் பயன் – விருந்தோம்பல்
என்கிற வேள்வியின் பயன் (முதல் சொல்லுக்கு முன்பு சேர்த்து படிக்கவேண்டும்)
விருந்தோம்பல் என்பது ஒரு வேள்விக்கு இணையானது. வேள்வியென்பது
தியாகத்தின் வெளிப்பாடு, அர்பணிப்போடு செய்வது. அதற்கு உண்டாய பயன் இன்ன அளவினது
என்று அளந்து சொல்லவியலாது. ஏனெனில் வரும் விருந்தினரின் தகுதியும் சிறப்பும்
சார்ந்துமே அமையும்.
இதற்கோர் உதாரணமாக ஆதி சங்கரரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சி.
அவர் ஒரு வயதான வறிய மூதாட்டிக்கு, அவள் வறியவளாக இருந்தாலும், வாயிலில் “ பிட்சை”க்காக
நின்ற அந்தணச் சிறுவனுக்கு தன்னிடமிருந்த ஒரே நெல்லிக்கனியை ஈந்த கனிவுக்காக பொன்மாரி
பொழிவித்ததும், அதன்காரணமாக கனகதாரை என்கிற கவியமுதம் பொழிந்ததும் நிகழ்ச்சி
என்பதைவிட நெகிழ்ச்சி என்பதே சரி. இது வாயிலில் உணவென்று வந்தவருக்கு, வறுமையிலும்
தன்னிடமிருந்த ஒன்றைத் தந்த மூதாட்டியின் வரலாறு. இராமாயணத்தில் வரும் சபரியின் விருந்தோம்பும்
பண்பு அவளுக்கு வீட்டுப்பேற்றினை அளித்தது.
மற்றுமோர் நிகழ்ச்சி, சிறுதொண்டர் சிவனடியாருக்குப் பிள்ளைக்கறி சமைத்த
நிகழ்ச்சி. அவ்வில்லத்தினரின் விருந்தோம்பும் பண்பு அவர்களுக்கு இறைவனின்
பதத்தினைத் தந்தது. இவையெல்லாம் கற்பனைகளோ, அல்லது அற்புத நிகழ்வுகளோ,
இந்நிகழ்ச்சிகள் விருந்தோம்பலின் சிறப்பையும், அவை பெரியாருக்குச் சென்றடையும்
போது தரும் பயன்களை விளக்கும் குறிப்புகள்.
கம்பராமாயணப்பாடல் மிக எளிதாக வாமன அவதாரத்தில் மகாபலிச்
சக்ரவர்த்தியின் கொடைக்குச் சமமாக வாமனன் உயர்ந்து, வளர்ந்து நின்றதை குறிக்கும்
விதமாக இவ்வாறு எழுதுகிறான்.
“கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன். பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள. விசும்பின்
ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி
ஒப்பவே”
இக்குறள் குறிப்பில் உணர்த்துவது, இவ்வெடுத்துக்காட்டுகளின் மூலம்
சுட்டப்படுவதைத்தான்.
இன்றெனது குறள்:
விருந்தோம்பும் வேள்விப் பயனளவு, உற்ற
விருந்தின் சிறப்பளவே யாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam