26th July, 2012
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
(குறள் 96: இனியவை கூறல் அதிகாரம்)
Transliteration:
Allavai thEya aRamperugum nallavai
nAdi iniya solin
Allavai - deeds that are not good
thEya – will diminish
aRam – virtuous deeds
perugum – will grow
nallavai nAdi – when desiring good to happen
iniya - sweet words of
goodness
solin – when speak
When sweet and meaningful
are spoken intendending good things to happen, the virtues in the world will
gain strength and grow. Ill will diminish on its own as goodness takes root.
There is no other weapon needed to quell evil ill’s designs.
As the virtuous deeds
grow, ill will lose its surviving power, and will diminish in strength and
eventually will be vanquished is the summary concept put forth through this
verse.
In other words, to be consistently
speaking sweet and useful words for others definitely is an effort at first but
over a period of time, becomes the trait and innate quality virtue in anybody.
Ill deeds wither whence good ones grow and sail
If sweeter words spoken for goodness to prevail
தமிழிலே:
அல்லவை – நல்லன அல்லாதவை
தேய - குறைந்துபட
அறம் – அறத்தின் வலி
பெருகும் – ஓங்கும், வளரும்
நல்லவை நாடி – நல்லன செயல்கள் நடப்பதற்காய் வேண்டி
இனிய - இனிமை பொருந்திய
சொலின் – சொற்களைப் பேசுவதால்.
நன்மைகள் விளைவதையே
நாடியொருவர், இனிய பொருள் பொதிந்த சொற்களை பிறரிடம் சொல்வாரானால், அதனால் அறத்தின்
ஓங்கிய வலிமை பெருகும், வளரும். அறமல்லாதனவை வலிமை குன்றி, தாமாகவே
மறைந்துவிடும். இனிய சொற்களைப் பேசுவதனால்
இருக்கும் பொது நன்மையை இக்குறளில் வலியுறுத்தியுள்ளார்.
இனிய பயனுள்ள சொற்களை
எப்பொழுதும் சொல்வது முதலில் ஒரு கடிய முயற்சிதான், ஆனாலும் தொடர்ந்து முயலுபவருக்கு
அதுவே அவருடை உள்ளுரை பண்பாகிவிடுகிறது. இப்பண்பு ஒவ்வொருவரிடத்தில் வளருமானால்,
அல்லவை மறையவேண்டியதுதானே!
அறமல்லனவற்றை அழிக்க தகுந்த
படைக்கலன் அறச் செயல்களை வளர்ப்பதன் மூலமே. அறச்செயல்கள் வளர வளர மறச்செயல்கள்
வலியிழந்து தாமே அழிந்துபடும்.
இன்றெனது குறள்:
நல்லறம் ஓங்கிடும் அல்லறம்
ஓய்ந்திடும்
நல்லதற்காய் இன்சொல் லிடின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam