May 21, 2012
The next chapter is about insisting the
virtuous life for everybody and gives us the greatness of virtuous path, what
happens if we don’t tread the path of virtuous life, what actually is
virtue, how people must follow the
virtuous path as much as they can etc,.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
(குறள் 31: அறன்வலியுறுத்தல்
அதிகாரம்)
Transliteration:
siRapInum selvam Inum aRaththiNungu
Akkam evanO uirukku
siRapInum - gives the place in heavenly
abode
selvamum – Also wealth (in this world when we live)
Inum – will
bless us with (wealth too)
aRaththinUngu – Like the virtuous path
Akkam – ascending (in life with wealth and happiness and contended life)
evanO - what else is there?
Uirukku – for lives (on this earth)
In this
new chapter, vaLLuvar speaks about the merits of virtuous life to induce
interest in everyone. Among the three (Virtue, wealth and pleasure), those who
lead a virtuous life will get a place in heavenly abode (oneness with the
Godhead and blissful self realization) and all other wealth to grow to greater
heights in their lives.
What
could be construed as wealth? Good education, company of good and great people,
good family, higher positions, good will of everyone and above all good health,
are all wealth that one could rightfully desire.
The
questioning tone of this kural , is to emphasize that there is no other way but
virtuous path to prosper in life and attain exalted position in life that has
earned respect and reverence. The very ordering of the 1st three
chapters is indicative of how vaLLuvar has tied treading the virtuous path to realization
of Godhead, reason for rains without fail and then about how one can get the
glory of renounced etc,.
What could assure the Heavenly abode and the
wealth for good living?
Other than the virtuous and righterous path
for those who are willing!
சிறப்புஈனும் – வீட்டுப்பேற்றினை நல்கும் (அறம், பொருள், இன்பத்தின்
பயனாக முடிவாகக் கிடைக்கும் பேறு)
செல்வமும் – பல செல்வங்களினையும் (கல்வி, கேள்வி, நல்லோர் சேர்க்கை, உயர்ந்தபதவிகள் உள்ளிட்ட
எல்லா செல்வங்களையும்)
ஈனும் - தரும்
அறத்தினூஉங்கு - அறவழி
வாழ்தல் போல
ஆக்கம் - மேன் மேலும் உயர்வைத் தரக்கூடியது
எவனோ – எதுவாக
இருக்கமுடியும்
உயிர்க்கு – மன்னுயிர்களுக்கு
தமிழிலே:
முதற்குறளிலேயே
அறவாழ்க்கையின் பயனைச்சொல்லி அறவாழ்வில் ஆர்வத்தை ஏற்படுத்த விழைகிறார் வள்ளுவர்.
அறம் பொருள்
இன்பம் என்ற இம்மூன்றிலும், அறவழி வாழ்வோர்க்கு, அது வீட்டுப் பேற்றினை நல்கக் கூடியதும்,
மற்றும் எல்லாவித செல்வங்களையும் தந்து மேன் மேலும் உயர்த்தவல்லது.
செல்வம்
என்பது பொருளைச் சார்ந்ததாக இல்லாமல், கல்வி, கேள்வி, நல்லோரிணக்கம், நல்லகுடும்பம்,
உயர்பதவிகள், எல்லோரிடமும் நன்மதிப்பு என்பவையும் என்று கொள்ளவேண்டும்.
இதனினும்
சிறந்த வழி எதுவாக இருக்கமுடியும் என்ற கேள்வி, இதைவிட சிறந்தவழி ஏதுமில்லை என்று சொல்லுவதற்காகவே. முந்தைய மூன்று அதிகாரங்களில் சொன்னது போல், இறைபொருளுக்கும்,
வான்மழை தவறாமல் பொழிவதற்கும், நீத்தார் பெருமைக்கும் அறத்தை முதன்மையாக வைத்துப் பேசியதால்,
இங்கு பொதுவில் சொல்லப்படுவது, அறவாழ்வியல் எல்லோருக்கும் கைவரக்கூடியதே என்ற பொருளில்
கூறி, அறத்தின் சிறப்பை உள்ளுரையாக பொதுவில் உணர்த்துகிறார் வள்ளுவர்.
இன்றெனது குறள்:
அறம்போல்நல் வீடளித்து சீருமளி தோங்க
திறமுயிற்கு மற்றில்லை காண் (வீடு – மோட்சம், சீர் – செல்வம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam