மே 17, 2012

குறளின் குரல் - 38


May 17th, 2012

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
                                            (குறள் 27: நீத்தார் பெருமை அதிகாரம்)

Transliteration:

suvai oLi URu Osai nAtRamena aindhin
vagai therivAn kaTTE ulagu

suvai  -  taste
oLi  - sight
URu - touch
Osai - sound
nAtRamena - smell
aindhin – all these five perceptions
vagaitherivAn kaTTE – who understands the purpose of these
ulagu – World belongs to (the person)

As vaLLuvar has already alluded, the gateways of our senses are the eyes, ears, nose, tongue, and the body that feels. They give us the sensory perceptions of taste, sight, smell, sound, and touch. He asserts that the world belogs to one who understands the appropriate use of all these sensory perceptions through the sensory gateways/receptors;

When someone indulges in activities that are inappropriate for these sensory perceptions then the thoughts are blunted, and the mind is clouded; the person strays from the virtuous path and meet with the sorrowful consequences.

When we read this verse, once again we get this doubt if this is rightfully categorized under this chapter of “Ascetic” or “renounced”.  Thirumuruga KripAnanda WAriaa swamigaL, during one of his discourses said this short story on “PattinaththAR” (பட்டினத்தார்).

One small incidence in his life completely changed this otherwise wealthy, miserly man to completely renounce everything, his house, the city and goto outskirts of the city to a far off field to find the ultimate truth of life. One day he was resting in a place, with his head placed slightly high for support.

The passing Goddesses Uma, Lakshmi and Saraswathi witnessed this and were talking among themselves. Both Lakshmi and Saraswathi said in wonder to Uma, “This is the pinnacle of renouncing. Such a rich man a few days back and today he has completely forsaken everything and is in the path of seeking! What a soul!”.

Uma said in return, “ Yes, May be! But, this man still needs a place high enough to keep his head for his bodily comfort. How can we call him completely renounced?”

Listening to this, PattinaththAr felt very small and understood the truth behind the Uma’s statement. He immediately took his head off and rested on a flat surface to further his quest of seeking.

After sometime, the Goddesses were passing by again and this time, both Lakshmi and Saraswathi did not fail to notice and commented to Uma, “Look, what have you to say now? It takes a while for everyone to leave everything. This man is truly renounced. For your one word, he has even left that small comfort!” Uma smiled again, “I think I am going to disappoint you again by saying this. This man still has not controlled all his sensory perceptions or shut his receptors. He still is listening to what the external world speaks about him.. Now how do we call him completely renounced?”

The rest of the story is not important for this context. The point is that who renounces, renounces everything. They don’t even worry about if the world belongs to them or not or what the world thinks of them. So “World blonging to someone for renouncing” can not be an incentive for anyone to renounce.

World belongs to who understands the five as such
The senses of savor, sight, smell, sound and touch

தமிழிலே:

சுவை – நாச்சுவை (உண்ணும் உணவினால், பேசும் பேச்சினால்)
ஒளி – பார்க்கும் காட்சிகளினால்
ஊறு – தொடுதல்,
ஓசை  - செவிவழி நுகர்வது
நாற்றமென – நாசிகளின் வழியே முகர்வது
ஐந்தின் – இவ்வைந்து புலன்களின் பயன்களின்
வகைதெரிவான்கட்டே – உண்மைப் பயன்பாட்டினை அறிந்தவர்க்கே
உலகு – இவ்வுலகில் (பெருவாழ்வு என்பது பெறப்பட்டது)

பொறிவாயில் என்று வள்ளுவன் முன்னரே சொல்லியவண்ணம், மனிதனின் புலன்களாற்றும் செயல்கள் யாவிற்கும் வாயில்களாம் கண்கள், நாசி, செவிகள், நா, உடல் இவற்றின் வழியே நாம் காணும், முகரும்,கேட்கும், சுவைக்கும், உணரும் இவற்றின் தன்மைகளையும், அவையவைகளின் பயன்கள் இவைதான் என்று அறிந்து அவற்றை அவற்றுக்காக மட்டும் பயனாக்கம் செய்பவருக்கே இவ்வுலகில் பெருவாழ்வு என்பதே இக்குறளின் பொருள்.

இப்புலன்களின் செயல்களுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதினால், கருத்தழிந்து, மனமயங்கி, பண்பான வாழ்க்கையிலிருந்து விலகி துன்பங்களையே அப்புலன்களின் வழியே சந்திக்கவேண்டும் என்பது சொல்லாமல் பெறப்பட்டது.

இக்குறளைப் படிக்கும் போது, இது நீத்தார் பெருமை அதிகாரத்திற்கு உரிய குறள்தானா என்ற ஐயம் நிச்சயமாக எழுகிறது. திருமுருக கிருபானந்த வாரியார் சொன்ன பட்டினத்தார் கதைதான் நினைவுக்கு வருகிறது!

பட்டினத்தார் வீட்டைத்துறந்து, ஊரைத்துறந்து, எல்லாவற்றையும் துறந்து, ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு வயல்காட்டில், வரப்பின் மேல் தலைவைத்து படுத்துக்கொண்டிருந்தாராம்.

அப்போது அவ்வழியே சென்ற உமையும், லட்சுமியும், சரசுவதியும், பேசிக்கொண்டார்களாம். சரசுவதியும், லட்சுமியும், உமையவளிடம், “இவரன்றோ முற்றும் துறந்த ஞானி, நொடியில் எல்லாவற்றையும் உதறிவிட்டு, இப்படி வர எத்துணை மனத்திண்மை வேண்டும் என்றார்களாம்”.

உமை சொன்னாளாம், “அதெல்லாம் சரிதான்.. ஆனால் உடம்புக்கு இன்னும் சுகம் வேண்டியிருக்கிறதே.. தலைக்கு உயர்வாய் வரப்பு மேடு கேட்கிறதே” என்றாளாம்.

பட்டினத்தாருக்கு துணுக்கென்று பட்டு உடனே, உமையவள் சொன்னதின் உண்மையை உணர்ந்து, உடனே தலையை வரப்பு மேட்டிலிருந்து எடுத்து வெறுந்தரையில் படுத்துக் கொண்டாராம். 

மீண்டும் சிறிது நேரம் கழித்து அவ்வழியே சென்ற மூவரில், மீண்டும் சரசுவதியும், லட்சுமியும், “உமையன்னையே, இப்போது என்ன சொல்லுகிறீர்கள்.. இப்போதாவது இவர் முற்றும் துறந்தவர் என்பதை ஒப்புக்கொள்வீர்களா?” என்றார்களாம்.

அதற்கு, உமையவள் சொன்னாளாம், “ எப்படி ஒப்புக்கொள்வது? தம்மைப்பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்று செவிகளும், அதனால் மனமும், சிந்தனயும் செயல்பட்டுத்தானே, இப்படியிருக்கிறார்!” என்றாளாம்.  

இது துறவு என்றால் என்ன என்பதை மிகவும் அழகாக அடிகோடிட்ட ஒரு கதை. இக்குறள் அத்தகைய துறவு நிலையைக்கூறவில்லை, துறந்தவர்களைப்பற்றியும் கூறவில்லை.  அப்படி வகைதெரிந்தவர்களுக்கு, இவ்வுலகம் ஒரு பொருட்டே இல்லை! அவர்களுக்கு உலகப்பற்றும் இருக்காது.

இன்றெனது குறள்:
நாவுடன் கண்செவி நாசியுடல் இவ்வைந்தின்
பாவுதல் பற்றார்க்கே பார்   (பாவுதல் – பற்றுதல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...