மே 13, 2012

குறளின் குரல் - 34


May 13th, 2012

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
                                               (குறள் 23: நீத்தார் பெருமை அதிகாரம்)
Transliteration:
irumai vagaitherindhu INDu aRam pUNDAr
perumai pirangitRU ulagu

irumai  -  the state of  current birth, and the birth after death (two states)
vagaitherindhu  -  understating the cause  and the pains of of this cycle of birth and  death and birth
INDu  - in this world, in this current birth
aRam pUNDAr – those who have chosen the austere path ( to break the cycle and reach a blissful union with superior state)
perumai  - their glory
pirangitRU – the highest ulagu – in this world

Another verse to sing the glory of people that have renunciated for ascetic path! Those “renounced” that have understood the pains of the cycle of birth and death, not lured by the earthly pleasures which are not permanent, and have chosen the austere path, their glory will be sung by the world.

Commentators differ in their interpretation of the word “irumai” (இருமை) here. Hindu theological interpretations refere to the cycle of birth and death as the “irumai” (twin states of every soul)! The ideal is to be rid of another birth of this karmic cycle to be one with the Supreme Godhead. Though the current birth is the continuation and the result of how our previous births were and led, it also offers hope and chance to redeem and seek a release from the ordeals of this karmic cycle by leading a life of high moral conduct.

Among the paths offered by the great Gita, “seeking ”, “duty bound” and “devotion” are all valid paths to reach the Goal. Since seeking by renouncing the world is not for everyone, as it imposes highest form of self discipline and control and be devoid of desires of any kind, they are highly placed and praised by the world.

“greatness of renounced, for they understand the states dual
  is kept the highest,  as “desires” they know to conquer and quell “

இருமை – இம்மை, மறுமை என்னும் உயிர்களுக்கான, கர்ம வினைப்பயன் தொடர்வான சுழற்சி, அதில்வரும் இன்ப துன்ப தோற்ற மாயைகள்.
வகைதெரிந்து - இவ் விம்மை மறுமையின் தொடர்பான இன்ப துன்பங்களைப் பற்றி தெளிவு கொண்டு
ஈண்டு – இவ்வுலகில், இப்பிறப்பிலேயே
அறம் பூண்டார் – துறவு மேற்கொண்டார் (அச்சுழற்சிப் பிணையை உடைத்து பேரின்ப பெருநிலை அடைய)
பெருமை -பெருமைதான்
பிறங்கிற்று - உயர்ந்தது
உலகு. - இவ்வுலகத்தில்

இந்த குறள் துறந்தார் பெருமையை மற்றுமோர் வகையிலே கூறுகிறது.  இம்மை, மறுமை ஆகிய இரண்டு நிலைகளயும் அவற்றினால் வரும் இன்ப துன்பங்கள் என்னும் மாயையான அறிவு மயக்கத்தையும் உணர்ந்து, தெளிந்து, அறவழி நின்று, ஆசைகளை அறுத்து, துறவு மேற்கொண்டவர்களை பெருமை உலகில் உயர்ந்து.

பரிமேலழகர் இருமை என்பதை பிறப்பு, வீடு என்று கூறுகிறார். பரிதியார் புண்ணிய, பாவம் என்கிறார். சிலர் இப்பிறப்பு, மறுபிறப்பு என்று கூறுகிறார்கள்.  நல்லவை, அல்லவை என்று கொள்வது குறளின் அமைப்புக்குப் பொருந்திவருகிறது. இருமை வகை தெரிந்து, அறம் பூண்டார் என்று கூறியிருப்பதால், அறம், அறமின்மை என்ற இருவகைப் பட்ட செயல்களை அறிந்து, அறவழி செல்வோர் என்று பொருள் கொள்ளலாம்.

அல்லது, கரும வினப்பயனால் தொடரும் இம்மை மறுமையென்னும் பிறப்பு-இறப்பு-மீண்டும் பிறப்பு என்கிற மாயச் சுழற்சியை அறுத்து இறைத்தன்மையை அடைதலும் பேரின்பமான இறையோடு ஒன்றுதலுமாகிய குறிக்கோளோடு துறவறம் பூண்டவர்களின் பெருமையே உலகில் உயர்ந்தது என்றும் கொள்ளலாம்.

கீதையளிக்கும் பாதைகளிலே “ஞான வழி”, “கரும வழி”, பக்திவழி” ஆகியவற்றுள், ஞான வழி எல்லோராலும் எளிதில் கொள்ளமுடியாது; எனவேதான் அவ்வழிகொண்டு அவாவறுத்து, துறவு மேற்கொண்டோரின் பெருமை உலகிலேயே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர்.

இன்றெனது குறள்:
இம்மை மறுமை வகையறி நீத்தவர்
செம்மை உலகில் உயர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...