மே 03, 2012

குறளின் குரல் - 25


May 3rd,  2012

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.
                                             (குறள் 13: வான்சிறப்பு அதிகாரம்)

Trasliteration:

viNindRu poippin virinIr viyanulagath
thuNind RudatRum pasi

viNindRu – If the rains from skies dry up (should be read as viN indri)
poippin – if it fails to rain in proper seasons
virinIr – surrounded by water of vast oceans
viyan ulagath(u) – this glorious word
thuNind(Ru) – Should be read as “uL nindRu”, meaning will come to stay (what? – hunger)
udatRum – one which causes troubles painfully (which – hunger)
pasi - hunger

The theme continues and follows the previous verse where vaLLuvar said the world lives because of rains. In this verse he says, if the rains fail us without their seasonal pours, all the living beings of the world will starve to death because of the fire of hunger.

The description of “viri nIr viyan ulagam” is not just added as decorative meter filler, but to indicate the expanse of the world surrounded by the oceans. It indeed suggests that, though the big oceans surround this glorious world, salty water is of no use for any vegetation or worthy of drinking. Both adjectives of “viri nIr” (vast waterbody of oceans) , and “viyan ulagam” (glorious world)  have no value or meaning if the rains fail us, is the subtle suggestion made by.  

He does not explicity say the consequences, but hints at them. He simply says if the rains fail, hunger will come to stay and trouble the world”.

"Failing rains in the world surrounded by vast waters
Wreaks the fire of hunger on its subjects that shatters"

தமிழிலே:

இன்றைய குறள், முந்தைய குறளின் நீட்சியான கருத்தாக வைக்கப்படுகிறது. மழையே உணவுக்கான காரணியாயும், உணவாயும் இருக்கிறது என்று சொன்னபின்னர், இக்குறள், அம்மழையானது பெய்யாமல் பிழைத்துவிடுமானால், அல்லது பொய்த்து, வரண்டு விடுமானால், அது எப்படி உலகுயிர்களை வருத்தி, அழித்துவிடும் என்பதை அடிக்கோடிடுகிறது.

“விரி நீர் வியன் நீர் உலகம்” என்பது, அகன்ற கடல்நீரால் சூழப்பட்ட பெருமைமிக்க உலகம் என்பதைக் குறித்தாலும், உள்ளுரைப்பொருளாக, இவ்வளவு நீரிருந்தும் உவர்கடலாக இருப்பதால், இதை முகந்து மேகமாக சுமந்து, மழையாக வானம் பொழியவில்லையானால், பசியாகிய தீ, நிலையாக இருந்து, இவ்வுலகுயிர்களை எரித்து அழித்துவிடும் என்று சொல்லப்பட்டது.

“விரி நீர்” மற்றும் “வியன் உலகம்” என்று புகழ்ந்ததும், மழை பெய்யாவிட்டால், அவற்றின் பயனின்மைபற்றி குறிப்பதற்காகத்தான். வெறும் வெண்பா வாய்பாடு நிரப்பியாக அல்ல.

சங்கப்பாடலொன்று சொல்வது போல, “மாரிவளம் பொய்ப்பின் ஊர்க்கின்னா” என்பதைத் தான் வள்ளுவரும் தெரிவிக்கிறார்.

விண்ணின்று – விண் இன்றி - வானமானது நீரினைமுகந்து தராமல் வற்றிப் போய்
பொய்ப்பின் – மழைபெய்யாமல் பிழைக்குமானால், ஒழியுமானால்
விரிநீர் – அகன்ற கடல் நீரால் சூழப்பட்ட
வியனுலகத்(து) - இவ்வுலகத்தில்
உண்ணின்று – நிலையாக குடிகொண்டு (எது? – பசி)
உடற்றும் – உடலை வருத்தி, உயிரை மாய்க்கும் வருத்தம் தரக்கூடிய (எது? – பசி)
பசி – பசி.

இன்றெனது குறள்:
மாரி பிழைக்கின் வருந்துமே ஆழிசூழ்
பாரும் பசியால் உழன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...