April 30, 2012
பிறவிப் பெருங்கடல்
நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா
தார்.
Transiliteration:
piRavip
perunkaDal nIndhuvar – nIndhAr
iRaivan
adisErA dhAR
piRavip – the
life of ours (intended meaning is the cycle of birth and death that our karma’s
get us into)
perunkaDal – the
Ocean without the sight of shore (when you’re wearied, everything seems long
and endless)
nIndhuvar – Can
swim (who can do that is not said directly but, indirectly.. read on)
nIndhAr - Can not swim ( referring to the following
words)
iRaivan – The
Godhead.
adi – the
feet
sErAdhAR – who
don’t submit themselves to the
Godhead (His feet seeking his guidance)
Last night, I got the “Research edition of
Thirukkural” compiled and edited by my favourite Tamil Scholar “Amarar kI.
vA.Jagannathan Avl.”, (அமரர் கீ.வா. ஜகன்நாதன் அவர்கள்) the prime disciple of
famous thamizh thAthA u.vE. swAminatha Iyer (உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்கள்).
Before writing on today’s kuraL, I could not help but recall, the two occasion
that he has visited our house. When my father was posted in
Madhuraanthakam for couple of years, (I was in 6th grade) he came to
do a discourse in a “Murugan Temple” and subsequently in our family wedding of
my last aunt in Vellore in 80’s, where he gave a small speech about my grandfather
– how he managed with 9 daughters, to get them all married in good families,
without begging, borrowing or depending on anyone, citing the popular quote, “ aindhu peNNai
petRAl arasanum AndiyAvAn” (ஐந்து பெண்ணைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்).
The book, published by Ramakrishna
Vidyalayam, in Coimbatore is a phenomenal research work. It is a “must have”
for anyone that is truly interested in ThirukkuraL. I wish I had this before I
started venturing into writing on kurAL. I may revisit some of the verses, I have
written about later.
In this verse, he simply says, the cycle of
birth and death can be overcome by holding onto the holy feet of Godhead. He
refers to the the life as “perunkaDal” (the ocean of vast expanse, implying the
seemingly endless journey it forces one into) and the long years with its ordeals
(mostly) as nIndhudhal (the inevitability of swimming to reach a shore).
The ordeals of life can make us think, that
this, 'less than an insignificant, invisible subatomic particle of a life' compared to the vastness of space-time continuum, is a like an ocean without
the sight of a shore.
This does not simply imply the drudgeries of
one life, but many lives that continue because of our Karmas of past life and
possibly the newly added ones of the present. The only recourse he suggests is
that we hold on to His holy feet to seek his divine guidance to be rid of this
cycle.
Now this sets me to think if he really used
the word “Azhi” as “an ocean” in the 8th verse previously discussed.
It could simply be “Those who live by the virtuous (aRa vAzhi) ways are the
only ones who can successfully live the life of “piRa vAzhi” , meaning the life
of Artha and Kama and mOksha in order.
The word “nIndhal” need not be meaning “swimming”. It could simply
connote “go through”, which makes sense.
I am sure, some commentaries have taken the meaning of “Azhi” as an
ocean because the word “nIndhal”.
For those who don't hold onto the feet of
Him to cross this life
Cycle of birth and death full of drudgeries
and weariness, is strife!
பிறவிப் – கரும பலன்களின்படி
மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் இச்சுழற்சியான வாழ்வு
பெருங்கடல் - கடப்பதற்கு,
கரையே இல்லையோ என்று ஐயுரவைக்கும், பெரிய கடல்
நீந்துவர் - நீந்திச்செல்ல முடியும் (அதற்கு உண்டான உடல் வலிவு,
மனத்திண்மை உள்ளுரைப் பொருளாக வைக்கப்பட்டது)
நீந்தார் – நீந்த முடியாது
(யாருக்கு என்பதை பின்வரும் சொற்களால் சொல்லி முடிக்கிறார். அதாவது, வேண்டிய உடல்,
மனத்திண்மையில்லாதவர்களால், இறை என்கிற பற்றுக்கோட்டை பற்றாதவர்க்கு)
இறைவன் அடி – இறைவனுடைய,
பற்றுக்கோடாயிருக்கும் தாள்கள்
சேராதார். - சென்றடையாதவர்கள்
தமிழிலே:
நேற்றிரவு, தமிழ்தாத்தா என்று எல்லோரும் நினைந்து நன்றியுடன் போற்றுகின்ற உ.வே.சுவாமிநாத
ஐயரவர்களின் முதன்மையான மாணாக்கரான அமரர் திரு. கீ.வா.ஜகன்னாதன் அவர்களின் – ‘திருக்குறள்
– ஆராய்ச்சிப் பதிப்பு” கைக்கு கிடைக்கபெற்றேன். (நன்றி: எங்கள் வீட்டு குந்தவை – அக்கா
சசிகலா)
நான் திருக்குறளைப் பற்றி எழுத ஆரம்பிக்குமுன்னரே
இந்த புத்தகம் கிடைத்திருக்குமானால், முன்பெழுதிய குறள்விளக்கங்கள், என்னுடைய மேம்பட்ட
புரிதலோடு இருந்திருக்குமென நினைக்கிறேன். நேரம் வரும்போது மீண்டும் அவற்றைப்பற்றியும்
எழுதுவேன்.
கி.வா.ஜகன்னாதன் அவர்களைப்பற்றி நினைக்கும்போது, அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. என் தந்தை மதுராந்தகத்தில் வேலையிட மாற்றம் செய்யப்பட்டபோது. அங்கே இருவருடங்கள் இருந்தோம். அந்தசமயத்தில், ஒரு முருகன் கோவிலில் சொற்பொழிவுக்காக வந்தபோது, எங்கள் வீட்டில் தங்கி இளைப்பாறிச் சென்றார்.
பிறிதொரு சமயம் எண்பதுகளின் தொடக்கத்தில் என்னுடைய அம்மாவழி கடை சித்தியின் திருமணத்துக்கு வந்திருந்து வாழ்த்திப் பேசி, என்னுடைய தாத்தாவின் ஒன்பது பெண்களுக்கும் கடன் வாங்காமல் திருமணம் செய்து வைத்ததை மிகவும் பாராட்டிப் பேசி, “ஐந்து பெண்ணைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்”., ஆனால் இவரோ “ஒன்பது பெண்களைப் பெற்றும் ஓங்கி வாழ்கிறார்” என்று வியந்து பாராட்டினார். அது போன்ற பெரியவர்களோடு கணமேனும் என்வாழ்வு உரசியதாலோ என்னவோ, எனக்கும் தமிழார்வம் ஒட்டிக்கொண்டது என்று நினைக்கிறேன்.

இந்த புத்தகம் கோயம்பத்தூர் இராமக்ருஷ்ண வித்யாலயத்தின்
பதிப்பு. தமிழறிந்தவர்கள், திருக்குறளில் விருப்பு உள்ளவர்கள் புத்தக சேகரிப்பில் இருக்க
வேண்டிய நூல்.
இக்குறள், பிறந்திறக்கும் இந்த கரும சுழற்சியாகிய
பெருங்கடலினை, இறைப்பொருளின் அடிகளைச் சேர்ந்தவரே கடக்கமுடியும், மற்றவர்களால் முடியாது
என்று கூறுகிறது.
பெருங்கடல் என்று கூறியது, கடலில் நீந்தப்போகும் ஒருவருக்கு கரையென்பது காணாமலே போய்விடுமோ என்னும் களைப்பும், சோர்வும் ஏற்பட்டுவிடும் என்பதால். கடல் என்று ஒன்றிருக்கும் போது, கரையிருக்கத்தானே வேண்டும். அந்தக் கரையென்பதே பிறந்திறக்கும் பேரவத்தை நீங்கிய பெருநிலை. இறைநிலையை அடைந்த உணர்வு!
இறைச்சிந்தனைக் கொண்டோர்க்கு மனவுறுதியும், அதனால் கடந்துவிடலாம் என்னும் நம்பிக்கையும் உண்டாகுமாதாலால், அவர்க்கு அது கடக்க எளிதாகிறது. பிறர்க்கு அது முடிவில்லாததும், கரையே இல்லாததைப் போன்ற தோன்ற மாயத்தையும், அயர்வையும் உண்டாக்குகிறது.

முதலில் படிக்கும் போது இக்குறள் எட்டாவது குறள் போலுள்ளதே என்ற ஐயம் ஏற்பட்டது. ஊன்றிப் படிக்கும் போது நுண்ணிய வித்தியாசம் புலப்பட்டது. அந்த மயக்கத்துக்குக் காரணம், "ஆழி" என்ற சொல்லுக்கு பெரும்பாலான உரையாசிரியகள் கூறியிருக்கும் பொருளால்தான்.
எட்டாவது குறளில் “ அறவாழி”, “பிறவாழி” என்ற சொற்களின் விகுதிச் சொல்லான “ஆழி” கடல் என்ற பொருளில்தான் கோர்க்கப்பட்டதா என்கிற ஐயம் ஏற்படுகிறது. “அறக்கோட்பாடுகளின் படி வாழுகின்ற அந்தணன் அல்லது இறைகுணத்தான்” என்ற பொருளிலும், அவ்வாறு அறக்கோட்பாடுகளின் படி வாழவில்லையானால், “பிறவாழி” என்கிற “பொருள்”, “இன்பம்” என்னும் கடல்களைக் கடத்தல் (அவற்றின் உண்மை நிலையுணர்ந்து) அரிதாகும் என்றும் இருக்கலாம்.
“நீந்தல்” என்பது “கடத்தல்” என்ற பொருளைக் கொண்டதாக எடுத்துக்கொண்டால், “ பிற வாழ் முறைகளான, பொருள், இன்பம் (அறக்கோட்பாடுகளின் படி வாழ வேண்டியவை) இவற்றை கடத்தல் கடினம் என்றுதான் கொள்ளவேண்டும். கடல் என்றே பொருள் கொண்டாலும், “அறமாகிய கடலை” என்றது, அதுபோல் வாழுதல் மிகவும் கடினம் என்பதை உணர்த்துவதாகவும் இருக்கலாம்.

இன்றெனது குறள்(கள்):
சாகரமாம் வாழ்விதனை
நீந்திக் கரைசேர
ஆகமத்தான்
தாளன்றி ஏது?
(After writing the previous one, I felt the
essence is better conveyed the following one.
பிறந்திறக்கும்
பேரவத்தை நீங்குவர் – நீங்கார்
இறைவந்தாள்
சேராத வர்
ஐயா, இன்று எதேர்ச்சையாக வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜா வை பற்றி இணையதளத்தில் தேடும் போது உங்கள் வலைப்பதிவை பார்க்க நேர்ந்தது. அற்புதம். உங்கள் தமிழ் திருப்பணி வாழ்க. சமயம் வரும்போது, கண்டிப்பாக திருக்குறளுக்காக உங்கள் வலைப்பதிவை படிக்க மீண்டும் வருவேன் (உங்கள் தளத்தை என் வலை சேமிப்பில் சேமித்து வைத்துள்ளேன்).
பதிலளிநீக்குநன்றி
வெங்கட் ராமன் எஸ்