ஏப்ரல் 23, 2012

குறளின் குரல் - 17

April 23, 2012

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
                                         (குறள் 4: கடவுள் வாழ்த்து அதிகாரம்)

Transliteration:

iruLsER iruvinaiyum sErA iRaivan
poruLsER pugazh purindAr mAttu

iruLsEr – knowledge that can confuse our thinking
iruvinaiyum – the understanding of good and bad deeds (like looking the face in shaky waters)
sErA -  will not be or come (when you have a clear knowledge of good/bad deeds)
iRaivan – the supreme knowledge of Godhead.
poruLsEr – that glory befitting that  elevated state of Godhead
purindAr mAttu – those who understand (you should seek the proximity of desire/dislike free soul)

Knowledge covered by the veil of illusion resulting in ignorance about the supreme soul gets us confused as to the true good or bad deeds. If we seek the closeness of that supreme soul, which comes out of a truthful search, even without our knowledge osmosis takes over and we get to the state of desire and dislike-free, whence what could possibly touch us?

If are close to and understand the glory of Supreme being, it is understandable that ‘bad deeds’ won’t be in our thoughts or ways. But why should it be for “good deeds”? Somehow the earlier commentaries were inadequate in explaining this

A little research into Geetha commentary by Swami Chidbhavananda (Ramakrishna Tapovanam), made it clear and meaningful. In his commentary to the 31st verse in “mOksha sanyAsa yoga” (‘yayA dharma dharmam cha kAryam chA karyamEva…),  it implies for people with Rajasa gunA, it is not possible to see the real good as their knowledge is akin to seeing the face in shaky waters.

“The confused intelligence is worse than complete ignorance is what is to be understood”. Even this previous sentence written the other way would be meaningless as it would in some way advocate ignorance is better. Only when you attain the sAthvik nature, which comes out of seeking that supreme soul, you get rid of the screen of avidya or mayA of confused knowledge of what is good or bad.

Illusory knowledge about of deeds done well or ill
Shall not touch those that understand His glory well.

இருள்சேர் – அறிவு மயக்கத்தை தரக்கூடிய
இருவினையும் – நல்வினை/தீவினை என்பதை பற்றிய அசைநீரறிவு (கீதையை ஒட்டிய விளக்கம்)
சேரா – வராது, இருக்காது (எது உண்மையான நல்வினை/தீவினை என்கிற தெளிவுற்றபோது)
இறைவன் – இறைப் பொருளாம் பேரறிவு
பொருள்சேர் புகழ் – அந்த உயரிய நிலைக்கு ஏற்ற புகழை (இறை நிலையின் புகழை)
புரிந்தார் மாட்டு – அதை புரிந்தவர்களிடத்தில் (இதற்கு வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்க)

சித்தத்தை சிவன்பால் வைப்பீர் – அத்துணையும் அவனே என்று. சித்தம் தெளிவுறும்  என்பர் சித்தர்களெல்லாம்..

அறியாமையால் நாமிது நல்வினை, தீவினை என்று கொள்ளும் கர்ம உபாதைகள், இறைவனின்பால் சித்தத்தை வைத்து இறைப்பொருளின் புகழை அறிந்தவர்களை சேரா. மயக்கமற்ற, உறுதியான நல்வினை, தீவினை பற்றிய தெளிவும் ஏற்படும் என்பதுதான் இக்குறளின் உள்ளுரை கருத்து.

இரண்டென்ற வேற்றுமை தோன்றும் மனதிலே பேதமும், அதனால் விளையும் இன்பதுன்பங்களும் நேருமாதலால், இறைப் பொருளின் ஏக, அனேக நிலையை தெளிவுற்றவர்கள், இரண்டையுமே சமநோக்கில் கொள்வார் என்பது பெறப்பட்ட பொருள்.

புகழ் புரிந்தார் எனும் சொல்,  இறைப்பொருளைப் புகழ்பவர்கள் என்ற பொருளிலே சொல்லாடப்படுவது, இறைப்பொருளின் தன்மைக்கு மாற்றாய் உள்ளதால், ‘புரிதல்’ அல்லது ‘தெளிவுறுதல்’ என்றே கொள்ளலாம்.

இறை என்பது. வள்ளுவன் பிறிதொரு குறளில் சொல்வது போல, அகழ்வாரைத் தாங்கும் நிலம். புகழ்வதும், இகழ்வதும் அப்பொருளைத் தீண்டுவதில்லை. அது ஒவ்வொரு உள்ளத்திலும் ஒளிரவல்ல அறிவு ஜோதி. அதுவே ஆண், பெண் பேதமில்லாத தனிப்பெரும் சுடர். இறைவன், இறைவி எனும் பாகு பாட்டிற்குள்ளும் அடங்காப்பொருள்.

இந்த குறளைப்பற்றி சிந்திக்கும்போது, “இருள்சேர் இருவினை” என்பதற்கான உரையாசிரியர்களின் விளக்கம் சற்றும் உவப்புக்கு உரியதாக இல்லை.  “மயக்கம் அல்லது அறியாமையோடு கூடிய நல்வினை,  தீவினைகள்” என்றே கூறப்பட்டிருக்கிறது. “தீவினை என்பது சரி”, நல்வினை என்றது எதனால்? அது எப்படி மயக்கமாகும் அல்லது அறிவின்மையாகும்.

எதற்காகவோ கீதையின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, (இறைவன் சித்தமோ?), மோக்ஷ ஸந்யாஸ யோகத்தின் முப்பத்தி ஒன்றாது சுலோகத்தின் பொருளைப் படிக்கநேரிட்டது. வியக்கத்தக்க விளக்கம் கிடைத்தது. கிருஷ்ணன், அர்சுனனுக்குச் சொன்னது: (சுவாமி சித்பவானந்தர் உரை)

‘பார்த்தா, தர்மத்தையும் அதர்மத்தையும், தகுந்த காரியத்தினையும் (நல்வினை), தகாத காரியத்தினையும் (தீவினை) தாறுமாறாக  எந்த புத்தி அறிகிறதோ அதுவே ராஜஸமானது (இருள் அறிவு – ஜகத்ரட்சகனின் உரை).

இதற்கு தரப்பட்டிருக்கிற விளக்கம் மிகவும் அழகானது. அசைகின்ற நீரில் உருவம் உள்ளபடி தெரிவதில்லை.  நல்வினைகளும் தீவினகளும் கூட திரிவுபட்டே தெரியும். முந்தைய குறளில் சொன்னது போல,  வேண்டுதல் வேண்டாமை என்கிற நிலையை அடைந்த இறைப்பொருளை அடைந்தவர்களுக்கு, இந்த அசைவுபட்ட நிலை இருக்காது. அப்போது எது உண்மையாகவே நல்வினை அல்லது தீவின என்கிற மயக்கமற்ற அறிவு ஏற்படும்.  

இப்போது “இருள்சேர் இருவினை” என்பதற்கான உரிய விளக்கம் கிடைத்தது.

இன்றெனது குறள்:

ஓங்குபுகழ் வல்லிறையைச் சேர்ந்தால் - வினையிரண்டால்
ஓங்காதே பாழ்மயக்கம் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...