April 18th, 2012
கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்?
(குறள் 2: கடவுள் வாழ்த்து அதிகாரம்)
Transiliteration:
katRadhanAlAya payan
enkol- vAlaRivan
naTrAL thozhAr enin?
katradhanAlAya – Because of
what we learn and become knowledgeable (limited sphere of knowledge is implied)
payan enkoL? – What use
is it to anyone or to the person
vAlarivan –
Omniscient, God head the fountainhead of great wisdom
naTRAL – the blessed
feet
thozhAr enin– if won’t surrender
( at the feet.. as a mark of respect and a sign to show that I am lower than
your feet in my knowledgeable state. Not to be construed as servility, but
humility)
The 2nd
kuraL talks about the humility in recognizing a greater force and knowledge
source above us omni-present/potent/scient. GOD. A person may learn a lot
during the course of life time and be recognized as the greatest intellectual. But
without humility to surrender to the Omniscient, the guiding force of great
intellect, what use is it to the person or to anyone?
Very often we hear
the word, “vidyA garvam” – The “high and mighty attitude” because somebody who
is celebrated as “great” in a narrow sphere of knowledge acts as if they know it
all. A lot of people also, justify that attitude and accept it as valid trait.
But the true wisdom does not show off; always have humility and recognizes that there
is much more to know ( go back to katRAdhu kai maNNaLavu – கற்றது கைம்மண்ணளவு) and acts grounded.
“vidya vinaya sampanna” (வித்யா வினய ஸம்பன்னா) or “viddhaikku
azhagu vinayam” (வித்தைக்கு அழகு வினயம்) is what is advocated by vaLLuvar in this kuraL.
When we have the humility, then we understand the greater wisdom above us that
governs the orderliness around, amidst what otherwise seems chaotic in the
universe, and surrender at its divine feet.
The word “natRAL” (நற்றாள்) has been used in
singular, which has puzzled me in this kuraL. Commentators also have understood
it in the sense of “feet” and used the word “thALgaL”(தாள்கள்/feet). The word thAL
also means “Adhi” meaning as used in the 1st kurAL, where it makes
sense that vaLLuvar is not asking anybody to fall at the feet of GOD supreme.
He is only asking us to pay respect to the Omniscient and surrender ourselves
to Him to guide us further.
What use is in
learning for who don’t
Surrender for
guidance to the Omniscient ?
இன்றெனது குறள்:
பேரறிவன் தாள்வணங்கும் பெற்றியிலார் தம்கல்வி
சாரமில் சக்கைபோ லே!
கற்றதனாலாய – நாம் அறிவுக்காக கற்கும் கல்வியினால்
பயன் என்கொல் – என்ன பயனை உடையதாய் இருக்கும்?
வாலறிவன் – பேரறிவாளன்
நற்றாள் – நன்மை தரும், நல்வழியில் நடத்தும் ஆதி இறைப்பொருளை (இறைவனது நல்ல தாளினை என்பது பிற உரையாசிரியர்கள் கூற்று)
தொழார் எனின். – தொழுது நம்மை (அந்த இறைப்பொருளிடம் வழிநடத்தலுக்காக) ஒப்புவித்தல்
கற்பதுவும், கற்கப்படும் பொருளாயும் இருக்கும் தூயறிவுச் சுடராம் இறைவன் என்ற
பொருளை அறிந்து கொள்ளாமல்,
அவ்விறைப் பொருளின் நல்ல தாளினை தொழாத ஒருவர் கற்கும் கல்வியினால் என்ன பயன்?
- இது குறளைப் படிக்கும் போதே புலப்படக்கூடிய பொருள்.
பேரறிவாளன் தாள்கள் என்னாது, ‘தாள்’ என்னல், இலக்கணப் பிழையோவென்றால், இல்லை. ‘தாள்’ என்பது ‘ஆதி’ என்ற பொருளும் கொள்ளுதலால், முதல் குறளில் சொல்லப்பட்ட ‘ஆதி’ பரம் பொருளையே குறிப்பதாக கொள்ளலாம்.
கற்பவை எல்லாம் இறையின் சூட்சும உருவத்தில் ஐந்து வெளிப்பாடுகளாகும் (ஓசை,உணர்தல், பார்த்தல், முகர்தல்,ருசித்தல்) அவற்றின் பௌதீக வெளிப்பாடுகளாகவும் உணர்ந்து கொள்ளவே, நம் அறிவும், அறிவுக்கண்ணைத் திறக்கும் கருவியான கல்வியும்.
வித்தைக்கு அழகு விநயம் என்பதற்கேற்ப நாம் கற்றது கடுகளவாகவும் கல்லாதது ககனமளவாகவும் உணர்ந்து, ஆதிப்பரம்பொருளை நாம் சரணமடைந்தோமானால், நம் உள்ளொளி பெருக்கி, ஞான ஊற்றாய் பெருகும் என்பதை குறிப்பினால் உணர்த்துவது இக்குறள். தொழல் என்றலும், நம்மை அவ்வாதியினிடத்தில் ஒப்படைப்பதென கொளலாம்.
(வள்ளுவரை மேலும் உள்ளுவோம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam