ஜூலை 21, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -104

आर्यामेव विभावयन्मनसि यः पादारविन्दं पुरः
पश्यन्नारभते स्तुतिं नियतं लब्ध्वा कटाक्षच्छविम्
कामाक्ष्या मृदुलस्मितांशुलहरीज्योत्स्नावयस्यान्विताम्
आरोहत्यपवर्गसौधवलभीमानन्दवीचीमयीम् १०१॥

ஆர்யாமேவ விபாவயன்மனஸி : பாதா³ரவிந்த³ம் புர:
பஶ்யன்னாரபதே ஸ்துதிம் நியதம் லப்³த்வா கடாக்ஷச்ச²விம்
காமாக்ஷ்யா ம்ருʼது³லஸ்மிதாம்ஶுலஹரீஜ்யோத்ஸ்னாவயஸ்யான்விதாம்
ஆரோஹத்யபவர்க³ஸௌதவலபீமானந்த³வீசீமயீம் 104

ஆர்யையை மனத்தில் நினைத்து, பாதாரவிந்தம் முன்னிருப்பதாய் கொண்டு துதிப்பவன், கடைக்கண் ஒளியை உறுதியாகப் பெற்று, காமாக்ஷியின் மென்னகை ஒளியலையாம் நிலவைத் தோழியாகக் கொண்டதும், ஆனந்த அலைவீச்சாம் மோட்ச மாளிகையின் மேன்மாடத்தில் ஏறி அமர்வான்.

ஆர்யையன் னையை அகத்துள்ளித் தாள்மலர் அம்புஜமுன்
பார்த்துத் துதிப்போன், பகர்க்கண் கடையின் பலத்துடனும்
ஆர்த்தகா மாட்சியின் அம்மென் நகையெல் அரிசகியாய்,
ஆர்ப்பலை மோட்ச அரண்மணை மாடம் அமருவனே!

உள்ளி-நினைந்து; பகர்-ஒளி; பலம்-உறுதி; ஆர்த்து-நிறைவித்த; அம்-அழகு; எல்-ஒளி; அரி-நிலவு; சகி-தோழி; ஆர்ப்பு-ஆனந்தம்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

ஆர்யை அன்னையை அகத்து உள்ளித் தாள்மலர் அம்புஜமுன் பார்த்துத் துதிப்போன், பகர்க் கண்கடையின் பலத்துடனும் ஆர்த்த, காமாட்சியின் அம் மென்நகை எல் அரி சகியாய், ஆர்ப்பலை மோட்ச அரண்மணை மாடம் அமருவனே!

===============================****======================================
(இந்த ஸ்லோகத்தை ஒட்டியே, வரிசையமைப்பும், ஆர்யா, பாதாரவிந்த, ஸ்துதி, கடாக்ஷ, மந்தஸ்மித ஸதகங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது)
===============================****======================================

स्तुतिशतकं सम्पूर्णम्
ஸ்துதிஶதகம் ஸம்பூர்ணம்

श्री मूकपञ्चशती सम्पूर्णा
तत् सत्
ஶ்ரீ மூகபஞ்சஶதீ ஸம்பூர்ணா

தத் ஸத்

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -103

परां मनसि भावयन् प्रतिदिनं तु भट्टारिकां
पटन् स्तुतिमिमां जन​: प्रचितनामपारायण​:
सुधाकर कलान्चित​: सुरकदम्ब संसेवित​:
कलाय मुकुळच्छवि: भवति कामकोटी स्व्यम् १०३॥

பராம் மனஸி பாவயன் ப்ரதிதினம் து பட்டாரிகாம்
படன் ஸ்துதிமிமாம் ஜன: ப்ரசிதநாம பாராயண:
ஸுதாகர கலாஞ்சித: ஸுரகதம்ப ஸம்ஸேவித:
கலாய முகுளச்சவி: பவதி காமகோடீ ஸ்வய uம் || 103||

உயர்ந்தவளான பரதேவியை உள்ளத்தில் தினமும் தியானம்செய்து நாமத்தை ஓதி, இந்த துதி நூற்றை எவர் படிக்கின்றனரோ, தேவர்கள் துதிக்க, சந்திர கலையும் காசாம்பூ வண்ண மேனியனாக, காமகோடியாகவே ஆவரே!

உயர்பர தேவியை உள்ளம் தினந்தொறும் உன்னிநாமம்
பயனுணர்ந் தோதுவோர், பண்துதி நூறும் பசனையாற்றி
உயர்ந்தவர், தேவரும் உற்றுத் துதிக்க, ஒளிக்கலையாய்
கயவண்ண ராயவர், காமகோ டீயெனக் காணுவரே!

உன்னி-தியானித்து; ஒளி-சந்திரன்; கயம்-காசப்பூ

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


உயர் பரதேவியை உள்ளம் தினந்தொறும் உன்னி நாமம் பயனுணர்ந்து ஓதுவோர், பண் துதி நூறும் பசனையாற்றி உயர்ந்தவர், தேவரும் உற்றுத் துதிக்க, ஒளிக் கலையாய், கய வண்ணராய் அவர், காமகோடீயெனக் காணுவரே!

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -102

इमं परवरप्रदं प्रकृतिपेशलं पावनं
परापरचिदाकृतिप्रकटनप्रदीपायितम्
स्तवं पठति नित्यदा मनसि भावयन्नम्बिकां
जपैरलमलं मखैरधिकदेहसंशोषणैः १०२॥

இமம் பரவரப்ரத³ம் ப்ரக்ருʼதிபேஶலம் பாவனம்
பராபரசிதா³க்ருʼதிப்ரகடனப்ரதீ³பாயிதம்
ஸ்தவம் பட²தி நித்யதா³ மனஸி பாவயன்னம்பி³காம்
ஜபைரலமலம் மகை²ரதிகதே³ஹஸம்ஶோஷணை: 102

சிறந்த வரத்தை நிறைவாய் தருவாள்; இயற்கையில் எழிலாள்; தூய்மையைத் தருவாள்; அனைத்து குணங்களும் அவையற்ற நிலைகள் விளக்கும் விளக்கவள்; இத் துதியை மனதில் தேவியை தியானிப்பவனாகப் தினமும் படிக்கவேண்டும்; அவனுக்கு உடலை வாட்டும் செபமும் வேள்வியும் வேண்டாமே

அதிசயப் பேறை அளிப்பாள்; இயற்கையில் அங்கமவள்;
அதிதூய்மை ஈவாள்; அனைத்து குணமும் அவையிலாத
கதிகள் விளக்கிடும் கையொளி; உள்ளங் கருதியிந்த
துதிப்பார்க்கு வேள்விச் சுடர்செபம் வேண்டா துவண்டுடலே!

அதிசயம்-சிறந்த; பேறு-வரம்; அங்கம்-அழகு,எழில்; கதியும்-நிலையும்; கையொளி- கைத்தீபம்; துவண்டு-வாடி, வருந்தி;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அதிசயப் பேறை அளிப்பாள்; இயற்கையில் அங்கமவள்; அதிதூய்மை ஈவாள்; அனைத்துக் குணமும் அவையிலாத கதியும் விளக்கிடும் கையொளி; உள்ளங் கருதியிதை துதிப்பார்க்கு வேள்விச் சுடர்செபம் வேண்டா துவண்டுடலே!

ஜூலை 20, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -101

समरविजयकोटी साधकानन्दधाटी
मृदुगुणपरिपेटी मुख्यकादम्बवाटी
मुनिनुतपरिपाटी मोहिताजाण्डकोटी
परमशिववधूटी पातु मां कामकोटी १०१॥

ஸமரவிஜயகோடீ ஸாதகானந்த³தாடீ
ம்ருʼது³கு³ணபரிபேடீ முக்²யகாத³ம்ப³வாடீ
முனினுதபரிபாடீ மோஹிதாஜாண்ட³கோடீ
பரமஶிவவதூடீ பாது மாம் காமகோடீ 101

போரில் வெற்றிக் கொடியும், சாதகரின் மகிழ்ச்சிப் பெருக்கும், மென்மைப் பண்புக்கான பெட்டகமும், சிறந்த கடம்ப வனமிருப்பவளும், இருடிகளால் துதிக்கப்படும் மேன்மையுள்ளவளும், கோடி பிருமாண்டங்களை மயக்கி வைத்திருப்பவளும், பரசிவனின் மனைவியுமான காமகோடி என்னைக் காக்கட்டுமே!

செருவில் செயக்கொடி, சீர்த்தயோ கர்க்கலர், சீர்கயத்த
பெருங்குணப் பெட்டகம், பேறாம் கடம்பப் பெருவனத்தள்,
இருடிகள் போற்றி இறங்கு, அனைத்தண்டம் ஈர்த்திடுமாம்,
கருத்தன் சிவனாட்டி காமகோ டீயெனைக் காத்தருளே!

செரு-போர்; செயக்கொடி-வெற்றிக்கொடி, அலர்-மகிழ்ச்சி; கயம்-மென்மை; இருடிகள்-முனிவர்கள்; இறங்கு-பக்தியோடு வணங்கும்; கருத்தன்-கர்த்தா; ஆட்டி-மனைவி

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


செருவில் செயக் கொடி, சீர்த்த யோகர்க்கு அலர், சீர் கயத்த பெருங் குணப் பெட்டகம், பேறாம் கடம்பப் பெருவனத்தள், இருடிகள் போற்றி இறங்கு, அனைத்து அண்டம் ஈர்த்திடுமாம், கருத்தன் சிவனாட்டி காமகோடீ எனைக் காத்தருளே!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...