மார்ச் 31, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 30

कुतुकजुषि काञ्चिदेशे कुमुदतपोराशिपाकशेखरिते
कुरुते मनोविहारं कुलगिरिपरिबृढकुलैकमणिदीपे 30

குதுகஜூஷி காஞ்சிதேசே குமுத தபோராசி பாக சேகரிதே |
குருதே மனோவிஹாரம் குலகிரி பரிப்ருட குலைக மணிதீபே ||    (30)

காஞ்சீபுரியில் உற்சாகத்தில் வாழ்வதும், ஆம்பல் மலர்கள் மொட்டிட்டு பூப்பதற்காய,  முன் செய்த தவப்பயனாக காட்சி தரும் சந்திரனை தலையில் மகுடமாய் கொண்டதும், குலபர்வதங்களின் தலைவனான, ஹிமவான் குலத்திற்கு ஒரே விளக்காக ஒளிதருகின்ற ஒன்றில் இப்பிறப்பாளன் மனதைச் செலுத்துகிறான்.

மகிழ்வுடன் காஞ்சியில் வாழ்வதில், ஆம்பல் மலர்களெலாம்
முகிழ்த்து மலரவும் முன்தவப் பேறாய் முளைநிலவில்,
மகத்தாய் தலைமேல் மகுடமாய் கொண்டதில், மாமலையோர்

உகந்த குலதீப ஒண்மையில், இவ்வுள்ளம் ஒன்றிடுதே


மார்ச் 30, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 29

स्मयमानमुखं काञ्चीभयमानं कमपि देवताभेदम्
दयमानं वीक्ष्य मुहुर्वयमानन्दामृताम्बुधौ मग्नाः 29

ஸ்மயமான முகம் காஞ்சீமயமானம் கமபி தேவதாபேதம் |
தயமானம் வீக்ஷ்ய முஹூர் வயம் ஆனந்தாம்ருதாம்புதௌ மக்னா: ||  (29)

சிரித்த முகத்தையுடையதும், காஞ்சீபுரியாகவே நிறைந்து விளங்குவதும், கருணை நிரம்பப்பெற்றதுமான,  ஒரு தேவதையை அடிக்கடி பார்த்து நாம் ஆனந்தமெனும் அமுதக் கடலில் ஆழ்ந்துவிட்டோம்

சிரித்த முகத்தாளாம் சீர்மிகு காஞ்சியைச் சேர்ந்தவளாம்
புரியும் கருணையாய் பொங்கி நிரம்பியே போந்தவளாம்
துரியளாம் தேவதைத் துங்கத்தைக் கண்டதில் தோய்ந்துமேநாம்
அரியவா னந்தமாம் ஆழியில் ஆழ்ந்தோம் அடிக்கடியே


மார்ச் 29, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 28

एणशिशुदीर्घलोचनमेनःपरिपन्थि सन्ततं भजताम्
एकाम्रनाथजीवितमेवम्पददूरमेकमवलम्बे 28

ஏண சிசு தீர்க்கலோசனம் ஏன: பரிபந்த்தீ ஸந்ததம் நமதாம் |
ஏகாம்ரநாத ஜீவிதம் ஏவம்பததூரம் ஏகம் அவலம்பே ||   (28)

மான்குட்டியினைப் போன்ற நீண்ட கண்களை உடையதும், எப்போதும், வணங்கும் பக்தர்களின் தீவினைகளுக்கு தடையாயிருந்து நீக்குவதும், ஏகாம்ரநாதருடைய உயிராயிருப்பதும்,  இத்தகையள் என்று சொல்வதற்கு எட்டாததுமான ஒரு பரம்பொருளை பற்றுக்கோடாக கொண்டேன். (தம்முயிரை விட தாமீன்ற உயிரையே பெற்றோர் பேணிக் காப்பர் என்பதால் கவியின் வாக்கை இன்னும் ஏற்றிச் சொல்லப்பட்டது)

மான்மறி போல்நீண்ட மைவிழி கொண்டு வணங்குமன்பர்
தான்செய் வினைத்தீ தனைத்தும் அகற்றும் தயையுமாகி
தான்சென் றொருமா தருவின்கீழ் வீற்றார் தமக்குயிராம்
ஊன்றினை உன்னவும் ஒண்ணாளைப் பற்றாய் உணர்ந்தனனே

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...