1st Jan 2014
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
(குறள் 616: ஆள்வினையுடைமை அதிகாரம்)
முயற்சி - இடைவிடா முயற்சியே இதனால் சுட்டப்படுகிறது
திருவினை - செல்வத்தை அல்லது செல்வத்தை கூட்டும் செயல்
ஆக்கும் - உண்டாக்கும்
முயற்றின்மை - அவ்வாறு இடைவிடாத ஊக்கமின்மை, முயற்சியின்மை
இன்மை - வறுமையை
புகுத்திவிடும் - தந்துவிடும்
ஒருவருக்குச் செல்வத்தை
உண்டாக்கித் தருவது அவரது இடைவிடா ஊக்கமும், அதனால் வரும் முயற்சியும்தான். அவ்வாறு
முயலாமை, அல்லது முயற்சியில் அயற்சியும், அதனால் தளர்வும் உடைமை, ஒருவரை வறுமையில்
ஆழ்த்திவிடும். இதுவே இக்குறளின் கருத்து. இதையே ஔவையும் கொன்றை வேந்தனில், “ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு” என்று ஊக்கமிருப்பதன் சிறப்பைச்
சொல்லுகிறார் ஊக்கும் விதமாக.
Transliteration:
muyaRchi thiruvinai Akkum muyaRRinmai
inmai puguththi viDum
muyaRchi - persistent effort
thiruvinai – wealth or wealth creating deed
Akkum – will create
muyaRRinmai – not having such persistent effort
inmai - poverty
puguththi viDum – will push into ( the dreadful poverty)
Wealth is created
by persistent effort for anyone. When not persistent, a person loses strength
in mind to pursue and eventually loses interest to do what is undertaken. It
will render such a person in poverty. As AuvayyAr says it in “kondRai
vEndhan”, “Ukkam uDamai AkkathiRku azhagu”, meaning, having the zeal
that leads to persistent effort, one builds wealth. AuvayyAr employs a positive
way of saying the same thought of this verse, completely opposite to the tone
of this verse.
“Devoid of persistent effort
Will
bring in poverty to hurt”
இன்றெனது குறள்:
திருவாக்கும் தாளாண்மை இல்லார்க்கு செல்வம்
கருகும் வறுமை வரும்
thiruvAkkum thALANmai illArkku selvam
karugum
vaRumai varum