ஜனவரி 17, 2014

குறளின் குரல் - 639

17th Jan 2014

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
                            (குறள் 631: அமைச்சு அதிகாரம்)

வன்கண் - உறுதியுடைமை
குடிகாத்தல் - குடிமக்களைப் கருத்துடன் பாதுகாத்தல்
கற்று - ஆள்வோர்க்கு உறுதுணையாக இருக்க நீதி நூல்களை கற்றல்
அறிதல் - கற்ற நூல்களை கசடற ஆராய்தல்
ஆள்வினை ஓடு - முயற்சி என்பதோடு
ஐந்துடன் - ஆகிய ஐந்து அங்கங்களைக்
மாண்டது - ஆராய்ந்து அறிந்து செய்வோரே
அமைச்சு - தேர்ந்த அமைச்சர்

இக்குறளில் மீண்டும் யார் அமைச்சர் என்பதற்கு அவர்களுக்கு இருக்கவேண்டிய ஐந்து அங்கக்கூறுகளைச் சொல்லி வரையறுக்கிறார் வள்ளுவர். அவ்வங்கங்களாவன, செய்யும் செயலில் அசைவின்றி உறுதியுடைமை, குடிமக்களைக் கருத்துடன் பாதுகாத்தல், ஆள்வோரை வழி நடத்த சிறந்த நீதி நூல்களை கற்றல், கற்ற நூல்களை கசடு அற ஆராய்ந்து அறிதல், தளராத முயற்சி என்பனவே. இவ்வங்கங்களைத் தேர்ந்து ஆராய்ந்து, செய்வோரே தேர்ந்த அமைச்சர் எனப்படுவார்.

அமைச்சர்கள் கற்றறிந்தவர்களாக இருக்கவேண்டியதை, “குலமுதல் தொன்மையும் கலையின் குப்பையும், பலமுதற் கேள்வியும் பயனும் எய்தினார்” என்று கம்பராமாயண மந்திரப்படலப் பாடல் ஒன்று கூறுகிறது.

இன்றைய ஆட்சிமுறையில் மந்திரிகளுக்குக் கல்வி தேவையில்லை, ஆனால் அவர்களை வழி நடத்துகிற அரசுமுறை அதிகாரிகளுக்கு தேவை என்று மாறிவிட்டதைப் பார்க்கிறோம். இன்றைய வழக்கில் ஆள்பவர்களை அமைச்சர்கள் என்கிறோம், அமைச்சர்களை அதிகாரிகள் என்கிறோம். வள்ளுவரின் ஆட்சியல் கோட்பாடுகளில், ஆள்வோருக்கும், அமைச்சர்களும் தேவையான அங்கக் கூறுகளை தெளிவாக வரையறுத்தும், இன்றைய ஆட்சியாளர்களின் கருத்துகள் பரவலாக வேறுபட்டு இருப்பதைப் பார்க்கிறோம்.

ஏலாதிப் பாடல் ஒன்று இக்குறளின் கருத்தை முழுவதுமாக கீழ்காணும் பாடல் வழி சொல்லுகிறது.

குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பும் ஆற்றல் உடைமை - முடியோம்பி
நாற்றம் சுவைகேள்வி நல்லார் இனஞ்சேர்தல்
தேற்றானேல் தேறும் அமைச்சு.

Transliteration:
vankaN kuDikAththal kaRRaRidal ALvinaiyODu
ainduDan mANDadu amaichchu

vankaN – being resolute
kuDikAththal – protecting citizens
kaRR(u) – learning works of ethics to be supportive to rulers
aRidal – thoroughly researched into what is learned
ALvinai ODu – tireless effort
ainduDan – blessed with the above five aspects of a minister and
mANDadu – doing it knowing how to execute successfully
amaichchu – define the true minister

vaLLuvar defines and discusses the five aspects required of a learned mister, in this verse. They are being resolute in undertaken tasks, protecting citizens with care, obtaining wisdom through learning, clarity of thought, and ceaseless effort.

In today’s governance we see something contrary to what vaLLuvars management and governance thoughts put forth as the right ways. We call rulers the ministers and the governing officials that aid ministers as executives or officers of the government. Also, education is not a pre-requisite of a ruler and we see the repurcussions of such twisted positioning in the governance too.

In fact old literary works either of period around the sametime or subsequent like ElAdi and kAmbarAmayaNa, verses that preach along the lines of vaLLuvar.

“Resolve, protecitng citizens, wisdom through learning, clarity of thought, effort
Are the five aspects that are required of a learned minister to guide with purport”


இன்றெனது குறள்:

உள்ளுறுதி கல்விதேற்றம் மக்களைக் காத்தலுடன்
கொள்முயற்சி ஐந்தும் அமைச்சு

uLLuRudi kalvithERRam makkaLaik kAththaluDan
koLmuyaRchi aindum amaichu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...